இரண்டு வருடத்திற்கு பிறகு குழந்தை. ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்பது அவளுக்கு அது இன்நொரு ஜென்மமாம்! என் தாயார் சொல்லியிருக்கிறார். பிரசவிக்கும் நேரத்தில் உன்னால் அந்த வலியை தாங்கிக்கொள்ள இயலுமா! நான் உனக்கு மிகவும் சிரமம் கொடுக்கிறேன் அல்லவா!...
மனைவி; என்ன இது சிறுப்பிள்ளைப் போல அழுகிறீர்கள் அடக் கடவுளே! உனக்கு அழக்கூட தெரியவில்லையே! அவ்வளவு சீக்கிரமாக உன்னை விட்டு பிரீந்துவிட மாட்டேனடா! ஏன் தெரியுமா! நீதான் சொல்வாயே உன் உயிர் என்னிடம் இருக்கிறது...
அன்று இரவு சரியாக 11 மணியளவில் யாரோ மௌனமாக அழும் குரல் கேட்க உறங்கிகொண்டிருந்த கனவன் தூக்கிவாரிப்போட்டு எழுந்தான். அருகில் படுத்திருந்த தன் மனைவியை திருப்பி பார்க்கிறான் அழுதது அவள்தான் அதுவும் வாயை பொத்திக்கொண்டு அழுகிறாள். "என்னமா இது எனக்கு தைரியம் சொல்லிவிட்டு இப்போது நீ அழுகிறாயே" என்று கனவன் கேட்க "பயமாக இருக்குடா புருசா... என்று அவனை வாரிகட்டி அனைத்துக்கொண்டு இன்னும் சத்தமாக அழுகிறாள்.
நேரம் 11;10ஆக "அம்மா" என்று அலற ஆரம்பித்தாள் இது பிரசவ வலிதான் என்று புரிந்துகொண்ட கனவன் அவன் முகத்தில் எல்லையில்லா ஆனந்தம் பிரக்கிறது. அதே சமயத்தில் அவன் மனதிலும். ஒரு பயம் கூட இருக்கிறது. உடனே தன் மனைவியை தூக்கிக்கொண்டு Car... சிட்டாக பறந்து மருத்துவமனைக்கு வந்தடைகிறான். அவன் மனைவியை பிரசவ வார்டில் சேர்க்கப்பட்டது. ஆஸ்பத்திரியே பரப்பரப்பாக காணப்பட்டது. நின்று பேசக்கூட நேரம் இல்லாமல் மருத்துவரும் செவிலியர்களும் இங்கும் அங்குமாய் ஓடினர். நேரம் ஆக ஆக கனவன் மிகவும் பயந்துப்போனாள். அவன் முகம் வேர்த்தது. சிறிது நேரத்திற்கு பிறகு அவன் மனைவியின் அழுகுறல் நின்றது. எதை எதையோ யோசித்த கனவன் துடிதுடித்துப்போகிறான். நேரம் சரியாக 11;35 தான்ட திடீரென்று "அம்மா"... என்று ஒரு பெரும் அலறல் சத்தம் கேட்டது.
தன் மனைவி படும் வேதனையை தாங்கிக்கொள்ள முடியாமல் சுவற்றில் இரு கைகளை வேகமாக அடித்து அப்படியே சரிந்து மண்டியிட்டு அழத் தெரியாமல் கூணீ குறுகிப் போகிறான். 11;50 மணிக்கு மருத்துவர் வெளியே வந்து உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது... உள்ளே சென்று பாருங்கள் என்றார். வேகமாக உள்ளே வந்தவன். தன் மனைவி தலையில் தடவிக் கொடுத்து தன் பிஞ்சு சிசுவை கவனமாக மெதுவாக தூக்கி தன் மார்போடு அனைத்துக்கொள்கிறான். "பெத்துட்டேன்டா போதுமா! என்கிறாள் அவன் மனைவி.
((யார் சொன்னது பெண்கள் மட்டும்தான் உயிரை சுமக்கின்றார்கள் என்று! காதலிக்கும் ஒவ்வொரு ஆண்களின் இதயத்தை தொட்டுப் பாருங்கள் அவன் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணின் நினைவுகளை சுமந்தே மடிகிறான்.
ஆண்களை புரிந்துகொண்ட பெண்களே இல்லை அப்படி ஒரு பெண் இனியும் பிறக்கப் போவது இல்லை.))
No comments:
Post a Comment